Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தனியார் நிறுவனத்தில் பெற்ற கடனை திரும்ப செலுத்தகோரி தற்கொலைக்கு தூண்டிய நபர் கைது

தனியார் நிறுவனத்தில் பெற்ற கடனை திரும்ப செலுத்தகோரி தற்கொலைக்கு தூண்டிய நபர் கைத திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், பொதுமக்களின் நலனை பேணிகாக்கவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சாவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 31.01 22-ந்தேதி அமர்வு நீதிமன்றம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சேகர் வயது 58. த.பெ.தங்கவேல், எண்LIG-124, Phase-li, அண்ணாநகர், கும்பகுடி திருவெறும்பூர், திருச்சி என்பவர் பஜாஜ் பைனான்எப் நிறுவனத்தில் தனிய மற்றும் வீட்டு கடன் பெற்று அதற்குண்டான தவணையை செலுத்தி வந்துள்ளார்.

கடந்த ஐந்து மாதமாக தவணையை சரிவர செலுத்தாத நிலையில் மேற்படி தனியார் நிறுவன ஊழியர்கள் தவணையை கட்ட சொல்லி சேகரை அவர் பணி செய்யும் இடத்திற்கு சென்று தகாத வார்த்தையால் திட்டியும், அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துவிட்டனர். இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு பாரதிதாசன் சாலை அரசினர் விருந்தினர் மாளிகை எதிபுறம் தனக்கு தானே பெட்ரோலை ஊற்றி பற்றவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும் 01.02.22-த்தேதி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டநிலையில் இது தொடர்பாக நடவடிக்கை கோரி அவரது

மனைவி அமர்வு நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து குற்ற எண்.45/22 U/s 174 CrPC-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் விசாரணையில் இறந்துபோன சேகரை அவர் பணி செய்யும் இடத்தில் மேற்படி நிறுவனத்தின் ஊழியர்கள் அவரது வாடிக்கையாளர் முன்பு தரக்குறைவாக பேசி அவரை தற்கொலைக்கு தூண்டியும், அவரது செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சென்றதால் அவமானமும், மனஉளைச்சலும் அடைந்த மேற்படி சேகர் தனக்கு தானே தீவைத்து கொண்டு இறந்துவிட்டதாக விசாரணையில் தெரியவருவதால், மேற்படி வழக்கின் சட்டப்பிரிவு 174 CrPoயிலிருந்து 305 IPC-யாக சட்டப்பிரிவு மாற்றம் செய்தும், சேகர் என்பவரை தற்கொலைக்கு தூண்டிய பஜாஜ் பைனான்எப் நிறுவனத்தின் ஊழியரான பெர்லிக்ஸ் சகாயராஜ் வயது 32 த.பெ.சேவியர் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்  கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *