கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகளை பூசாரிகளுக்கு வழங்க வலியுறுத்தி பூசாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

கோவிலுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகளை பூசாரிகளுக்கு வழங்க வலியுறுத்தி பூசாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு!!

கோவில்களுக்கு தானமாக வழங்கப்படும் மாடுகள் பொதுவாக பூசாரிகளுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது அந்த மாடுகளை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்க திருச்சி மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Advertisement

தமிழக அரசு ஆணைப்படி கோவில்களில் தானமாக வழங்கப்படும் மாடு பூசாரிகளுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், புரட்டாசி மாதங்களில் மாடுகள் அதிகமாக தானமாக வழங்கப்படும் நிலையில், மாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நேரடிப் பார்வையில் கிராம கோவில் பூசாரிகள், நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தினர் மனு அளித்தனர்.

https://youtu.be/hO6NVGIYrpo
Advertisement