மகாளய அமாவாசை முன்னிட்டு நாளை அம்மா மண்டபத்தில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது - ஆட்சியர் அறிவிப்பு!!
திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில்
நாளை 17.09.2020 (வியாழக்கிழமை)
மகாளய அமாவாசை முன்னிட்டு தர்பணம் செய்வது அனுமதிக்கப்படவில்லை
மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அறிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கோவிட் -19 தொற்றுநோய் பரவுதலை தடுத்தல் தொடர்பாக
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழக அரசால் எதிர்வரும்
30.09.2020 நள்ளிரவு 12.00 மணி வரை 144 தடை உத்தரவினை நீட்டிப்பு செய்து ஆணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் குற்றவியல் நடைமுறை
சட்டம் பிரிவு 144-இன் கீழ் தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும 17.09.2020 (வியாழக்கிழமை) மகாளய அமாவாசை அன்று ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் தர்பணம் செய்வது அனுமதிக்கப்படவில்லை. எனவே பொதுமக்கள் நாளை தினம் அம்மாமண்டபதிற்கு வருகை புரிவதை தவிர்க்க வேண்டும். கோவிட்–19 நோய் தொற்று
பரவுதலை தடுத்திட பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு கேட்டு கொண்டுள்ளார்.