Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் புதிய திருத்தேர் திருப்பணி தொடக்கம்

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களின் திருத்தேர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருச்சி சமயபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

2025–2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற அறிவிப்பு எண் 150ன் படி, ரூ.2.22 கோடி மதிப்பில் புதிய திருத்தேர் திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த திருப்பணியின் தொடக்க நிகழ்ச்சி இன்று (15.03.2026) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் எம். சூரியநாராயணன், உதவி ஆணையர் வி. சமதி (நிர்வாகம்) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் பெ. பிச்சைமணி, சக்தி இராஜசேகர், சேது வெட்சமணி உள்ளிட்ட அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் மூலம் கோயிலுக்கான புதிய திருத்தேர் உருவாக்கப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *