திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியம் பேரூர் கிராமத்தில்அரசு ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியில் 24 சிறுவர்கள் 36 சிறுமியர்கள் உட்பட 60 பேர் பயின்று வருகின்றனர்.
மூன்று ஆசிரியர் பள்ளியாகும்.
இன்று காலை சமையலர்கள் சமைத்துக் கொண்டிருந்தபோது மேற்கூரைபெயர்ந்து விழுந்துள்ளது. இதை அடுத்துபெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு விடாமல்
பள்ளிக்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் துறையூர் அரசு ஆதிதிராவிட நல தனி வட்டாட்சியர் ஆனந்த் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கட்டிடம் வேண்டும். மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கட்டிடம் இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் பிள்ளைகள் உயர்நிலைப் பள்ளி கட்டிடத்தில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறியும்
தங்களது கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து தீர்வு காண வேண்டும் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments