திருச்சி தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளியில் நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஆழித்துளி என்ற நிகழ்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை வகித்தார்.
ஆசிரியை சரண்யா அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் தலைவர் ஜோசப் ராஜ் முன்னிலை வகித்தார்.
பள்ளிக்கு ரோட்டரி நண்பர்கள் உதவியுடன் மழை நீர் அமைப்பு உருவாக்கபட்டது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வண்ணமயில் சிட்ஸ் நிறுவனர் Rtn. பாண்டியன் நீரின் அவசியத்தை உணர்த்தும் வண்ண சுவர் ஓவியங்கள் பள்ளிக்கு வரைந்து கொடுத்தார்.
மேலும் அவர் மாணவர்களிடம் பேசுகையில் நீரின் தேவை இந்த உலகில் வாழும் அனைவருக்கும் இன்றியமையாதது. இதை தான் திருவள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்ற குறள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தண்ணீர் அதிகம் கிடைக்கக்கூடிய மழைக்காலத்தை விட, நீர் கிடைக்காத கோடை காலத்தில் தான் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது என்றே சொல்லலாம்.
நிலத்தடி வறண்டு காணப்படுவதால் நீரின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நீரின் மேலான்மையை உயர்த்த வேண்டும்
நீரின் தேவையை உணர்ந்த அரசர்கள் பல லட்ச கணக்கில் செலவு செய்து அணைகளை கட்டினார்கள். ஆனால் இப்பொழுது தண்ணீரை பற்றி கவலையில்லாமல் கட்டடங்களை கட்டி வருகின்றனர். இதனால் ஏரிகள், குளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தான் மழைக்காலங்களில் வெள்ளமும், கோடை காலத்தில் நீர் வறட்சியும் காணப்படுகிறது.
நீர் மேலாண்மை அடைவதற்கு கிணறுகள், குளங்கள் போன்றவற்றை அமைத்து நீரை சேமிக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கின்ற குளங்கள், கால்வாய்களை பராமரிக்க வேண்டும். சிறு ஓடைகளில் குறுக்கே தடுப்பனைகள் கட்டி மழை நீரை சேமிக்கலாம்.
சில நாடுகள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நீர் மேலாண்மை செய்கின்றனர். மழை நீர் சேமிக்கப்பட்டாலே உலகில் உள்ள தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும்.
ஒவ்வொரு சொட்டு நீரும் சேமிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டும், மேலும் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க நீர் மாசுபடுவதைத் தவிர்ப்பது தற்போதைய தலைமுறையினரின் பங்கிலும் கட்டாயமாகும் என்று கூறினார். விழாவில் ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் செயலாளர் சுப்ரமணியன் பொருளாளர் ரியாஸ், பாண்டியன், ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments