திருச்சி உப்புபாறை அருகே பென்ஷனர் தெருவில் இரண்டு மாத காலமாக பாதாள சாக்கடை கழிவுகள் அனைத்தும் வீட்டிற்கு முன்பாக கழிவுகள் வழிந்தோடி உள்ளது.இதனால் இப்பகுதி பொது மக்கள் மிகவும் அவதியுற்ற நிலையில் திருச்சி மாநகராட்சி அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று பொதுமக்கள் மீண்டும் மாநகராட்சி ஊழியரிடம் தொடர்பு கொண்டு சாக்கடையை சுத்தம் செய்யுமாறு கேட்டனர். அதற்கு அங்கு வந்த மாநகராட்சி ஊழியர் இதற்கு 5 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பென்ஷனர் தெருவில் 30க்கும் மேற்பட்டோர் பெண்கள் ,கர்ப்பிணிகள் என அனைவரும் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.
மேலும் மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்ததையடுத்து தற்போது மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதிக்கு வந்து சாக்கடைக் கழிவுகளை சுத்தம் செய்து வருகின்றனர்.
Comments