சமூக வலைதளங்களுக்கு சவால்விடும் வகையில் நம்ம ஊரு சாதனைப்பெண் உருவாக்கிய சமூக இணையதளம்!!
அன்று பாரதி சொன்னான் சமைக்கும் கரங்களும் சரித்திரம் படைக்கும் அதை இந்த பூமி பார்க்க வேண்டும் - என்ற பாடலுக்கு ஏற்றவாறு தற்கால பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டே வருகின்றனர் இக்கால பெண்மணிகள்! நம்முடைய திருச்சியில் பிறந்து சமூக வலைதளங்களுக்கு சவால்விடும் வகையில் சாதனைப் பெண்மணி, குடும்பத்தலைவி உருவாக்கிய புதிய செயலியை பற்றிய தொகுப்பு தான் இது!
திருச்சி சமயபுரம் அருகே இருங்களூரை சேர்ந்தவர் கிருத்திகா(33). பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களுக்கு நிகராக நம்முடைய ஊர் பெண் அனைத்திற்கும் சவால்விடும் வகையில் புதிய "பேப்பர் பேஜ்" என்னும் சமூக வலைத் தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். கிட்டத்திட்ட மூன்று ஆண்டு உழைப்பிற்குப் பிறகு கடந்த வருடம் "பேப்பர் பேஜ்.இன்" என்னும் இணையதளத்தை உருவாக்கி மலேசியா, சிங்கப்பூர் நம்முடைய இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி இதுவரை 6 மில்லியனுக்கு அதிகமானோர் பயன்படுத்தி வரும் சமூக வலைதளமாக மாற்றியுள்ளார் நம்ம ஊரு தமிழ் பெண்.
இதுகுறித்து பேப்பர் பேஜ் சமூக வலைதள உரிமையாளர் மற்றும் நம்ம ஊரு பெண் கிருத்திகாவிடம் பேசினோம்.... "திருச்சி சமயபுரம் அருகே உள்ள இருங்களூர் தான் என்னுடைய சொந்த கிராமம். திருமணமாகி தற்போது சென்னை நங்கநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றேன். எம் காம், எம்பில் முடித்து கல்லூரி பேராசிரியராக 2 ஆண்டு பணி புரிந்து விட்டு தற்போது இல்லத்தரசியாக பேப்பர் பேஜ்.இன் என்னும் என்னுடைய இணையதளத்தை தற்போது பார்வையிட்டு வருகிறேன்.
என் கணவர் ராம்பிரசாத் வழக்கறிஞர். அவர் ஏற்கனவே பி.டி.எஃப் முறையை பதிவிறக்கம் செய்யும் ஒரு இணையதளத்தை நிர்வகித்து வந்தார். இதனை ஏன் நாம் பெண்களுக்காக அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் மாற்றக் கூடாதா என நினைத்து முதல் கட்டமாக பணிகளை தொடங்கினேன். அதன் தொடர்ச்சியாக www.paperpage.in என்னும் இணைய தளத்தை உருவாக்கினோம்.இந்த தளத்தை உருவாக்கி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது சில மாற்றங்களை கொண்டு வந்து வெற்றிகரமாக 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
ட்விட்டர், ஃபேஸ்புக் என பல இணைய தளங்கள் இருந்தாலும் இதில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாகவே அமைத்துள்ளோம்.பெண்கள் தயாரிக்கும் சேலைகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கூட இவற்றின் மூலம் அவர்களுடைய தொழிலை விரிவுபடுத்தலாம். எங்களுடைய பேப்பர் பேஜ்.இன் இணையதளத்தில் மெசேஜ், வீடியோ ,வாய்ஸ் கால் மற்றும் பண பரிமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கி உருவாக்கியுள்ளோம். பேப்பர் பேஜ் இணையதளத்தில் தவறான பகிர்வுகள் ஏதாவது வந்தால் உடனே கண்காணித்து அதனை அகற்றி விடவும் தயாராக இருந்து வருகிறோம். வேலைவாய்ப்பு மற்றும் பயனுள்ள தகவல்கள் அளித்து வருவதால் இதுவரை உலகமெங்கும் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் எங்களுடைய பேப்பர் பேஜ் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
எனவே சமூக வலைதளங்கள் ஆக்கவும் அழிக்கவும் பயன்பட்டு வருகின்றன பெண்கள் வீட்டிலேயே முடங்கி விடாமல், அவரவர் திறமைக்கு ஏற்றவாறு நம்முடைய வாய்ப்பை நாம் தான் உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்கிறார் புன்னகையுடன் நம்ம ஊரு சாதனைப்பெண் பெண் கீர்த்திகா!
Social Media Like Facebook http://www.paperpage.in
Video Sharing Website http://www.videopage.in