திமுக தலைவர் ஸ்டாலினின் எடுபிடி நடிகர் சூர்யா என திருச்சியில் ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் பேட்டி!!
கொரோனாவை வெல்வோம் மன உளைச்சல் நீங்கி வாழ்வோம் -எனக்கூறி தமிழ் நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நல சட்ட திட்டங்களை விளக்கி கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் வாகன பிரச்சாரத்தை துவங்கினார். வருகின்ற 30 ம் தேதி சென்னையில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார். இந்நிலையில் இன்று திருச்சி பாலக்கரை செடல் மாரியம்மன் கோவில் அருகில் வந்த அவரை வரவேற்ற திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்துள்ளது. மக்கள் நலம் காக்கும் மத்திய அரசை அற்ப அரசியல் லாபத்திற்காக பல அரசியல் கட்சிகள் தினமும் விமர்சித்து வருகின்றன பொய்யான தகவல்களை பரப்பி பாரதப் பிரதமர் மோடி அவர்களின் நன்மதிப்பைப் கெடுக்க முயற்சிக்கின்றனர். இதுபோன்ற சூழலில் உண்மை நிலையை விளக்கவும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை அறிந்து மக்கள் பயன்பெறவும் விழிப்புணர்வு பிரச்சாரம் யாத்திரையை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் மாநில தலைவர் இப்ராஹிம்…..
மாணவர்களின் நீட் தேர்வில் பொய்யான விமர்சனங்களை திமுக சொல்லி வருகின்றது, நீட் தேர்வு எளிமையாக இருந்தது என மாணவர்களே திமுகவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள். மாணவர்களின் கல்வித்திறனை செம்மைபடுத்தாமல் அதை ஊனப்படுத்தும் செயலை திமுக தலைவர் ஸ்டாலின் செய்து வருகிறார்.அவருக்கு எடுபிடிகளாக சூர்யா போன்ற நடிகர்கள் ஈடுபட்டுள்ளது நடிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. இவர்களின் திரைப்படங்கள் ஓடாவிட்டால் மத்திய மாநில அரசுகளுக்க எதிராக சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அதன் மூலம் தங்கள் திரைப்படங்களை ஓடவைக்க முயற்சி செய்கின்றனர். இது அவர்களின் முட்டாள் தனத்தின் வெளிப்பாடு என குற்றம் சாட்டினார்.