
தேர்தல் பரப்புரையின் போது தமிழக முதல்வரின் தாயாரை இழிவாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணை பொது செயலாளருமான ஆ.ராசாவை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் அருகில் அதிமுக உறையூர் பகுதி செயலாளர் பூபதி தலைமையில் அதிமுக தொண்டர்கள் ஆ.ராசாவின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.


முன்னதாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் பேரணியாக சென்ற அதிமுகவினர் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தரக்குறைவாக பேசிய திமுக துணை பொது செயலாளர் ஆ.ராசாவை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW







Comments