தமிழகம் முழுவதும் கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் அரசியல் பிரமுகர், கல்வியாளர்கள் அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை ஊர் முக்கியஸ்தர்கள் பள்ளிக்கு அழைக்கப்பட்டு அண்ணலின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாணவ மாணவியர்களுக்கு கர்ம வீரர் குறித்த பேச்சுப்போட்டி நடைபெற்று வெற்றியாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, தங்களது பள்ளியில் பயிலும் 240 மாணவ மாணவியர்களுக்கு, தலைமை ஆசிரியர் ராஜசேகரன் தலைமையில் இருபால்
ஆசிரியர்களும் தழை வாழை இலை போட்டு, நான்கு வகை கூட்டு, சாதம், சாம்பார், வத்தல் குளம்பு, ரசம், மோர், அப்பளம், முட்டை, பாயசத்துடன் மாணவ மாணவியர்களுக்கு அறுசுவை உணவு அளித்தனர். கிராம்ப்புற மாணவர்கள் விருந்து உணவை ஆசையாக ஆசையாக உண்டு மகிழ்ந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY#
டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments