Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வெள்ளைக்காடான விவசாய நிலங்கள் கரைகள் இல்லாததால் அவலம்

திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கரைகள் மற்றும் முறையாக பராமரிக்கப்படாத வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீர் அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து விவசாயிகளுக்கும், சாகுபடிக்கு பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் பழையூர் வாய்க்காலுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் மழை நீர் புகுந்து வெள்ளைக்காடானது.ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூர் பகுதியில் 2 கிலோமீட்டர் தொலைவுக்கு கொடிங்கால் வாய்க்கால் என்று அழைக்கப்படும் பழையூர் வாய்க்கால் தூர் வாரப்படாமல் இருந்தது. இது ஒரு வடிகால் வாய்க்கால் ஆகும் சில இடங்களில் விவசாயிகள் இதை பாசனத்திற்கும் பயன்படுத்துகின்றனர். வாய்க்கால், கரைகள் இருந்ததே தெரியாமல் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து, காணாமல்போன கொடிங்கால் வாய்க்கால் மற்றும் கரைகளை கண்டுபிடித்து தருமாறு அப்பகுதி விவசாயிகள், முதல்வரின் முகவரி துறைக்கு மனு அனுப்பினர். முதல்வரின் முகவரி துறைக்கு மனு அளித்ததுடன், ஆற்றுப் பாதுகாப்பு துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு வலியுறுத்தியுள்ளனர் விவசாயிகள்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்கால் தூர் வாரப்படாததால், வாய்க்காலின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, வாய்க்காலிலேயே ஆங்காங்கே விவசாயம் செய்யப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், மாமரங்கள் போன்றவை நடப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பு, தூர் வாராத காரணத்தால் கொடிங்கால் வாய்க்கால் எங்கு இருக்கிறது என்றுத் தெரியாத நிலை இருந்து வந்தது.

ஆண்டுக்கணக்காக தொடர்ந்து விடுக்கப்பட்ட கோரிக்கை மற்றும் பெரும் போராட்டத்துக்கு பின்னர் எலமனூரில் 2 கிலோமீட்டர் நீளம் உள்ள வாய்க்கால் வருவாய்த் துறையினரால் அளவீடு செய்யப்பட்டு, எல்லை கற்கள் நடப்பட்டுள்ளன. வருவாய்த் துறை ஆவணத்தின்படி (FMB) கொடிங்கால் வாய்க்காலின் அகலம் கிட்டத்தட்ட 68 மீட்டர் அதாவது 220 அடி முதல் (22 மீட்டர்) – 72 அடி வரை என என தெரிய வந்துள்ளது.விவசாயிகளின் கோரிக்கை என்னவென்றால் “ஆற்றுப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் வாய்க்காலை மீட்டு, வாய்க்காலில் ஆக்கிரமித்து நடப்பட்டுள்ள மரங்களுக்கு எண்களிட்டு, தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

தூர் வாரும் பணியில் கொடிங்கால் வாய்க்காலின் அகலம் 25 அடியாக ஆக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களையும் மீட்டு, வாய்க்காலை அதன் முழு கொள்ளளவுக்கு கொண்டுவர வேண்டும்.

நல்ல வலுவான, உயரமான, அகலமான கரைகள் அமைக்கபட வேண்டும். அப்போதுதான், வாய்க்காலில் அதிக நீர் வரும்போது மழைக்காலங்களிலும் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிப்படையாது.

இந்த வாய்க்காலின் இருபுறமும் விவசாய நிலங்கள் உள்ளது. ஆனால், வயலுக்கு செல்லவும், இடுபொருட்களை கொண்டு செல்வவும் விவசாயிகள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர். விவசாயிகளின் சிரமத்தை குறைக்க வாய்காலின் இருபுறமும் நல்ல வலுவான, உயரமான, அகலமான கரைகள் அமைத்தால் விவசாயிகள் அதை கரைவழிச் பயன்படுத்திக் கொள்ள இயலும்” என்கின்றனர் விவசாயிகள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *