திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலியபுரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ளது. அருள்மிகு ஶ்ரீமரகதவல்லி தாயார் உடனுறை ஶ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்.
இக்கோயில் பிரசித்தி பெற்ற நவக்கிரக பரிகாரக் ஸ்தல கோவில் ஆகும். இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது கோவிலுக்கு கடந்த 2019ல் குடமுழுக்கு செய்யப்பட்ட பொழுது , கோயில் புனரமைக்கப்பட்டு, 27 நட்சத்திரங்களுக்குடனான சன்னிதானங்கள் நிர்மானம் செய்யப்பட்டது.
இதில் உத்திரம் நட்சத்திரத்திற்குரிய சன்னதியிலிருந்த ஒரு அடிஉயரமுள்ள கல்லிலான விநாயகர் சிலையை மர்ம நபர்கள் இரவு வேளையில் திருடிச் சென்றது தெரியவந்தது.
இந்துசமய அறநிலையத்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிலை திருடு போனது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO







Comments