தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சித்துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர், தூய்மை காவலர்களை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உள்ளாட்சித்துறை பணிகளை தனியாருக்கு தாரைவார்ப்பதை திமுக அரசு கைவிடவேண்டும் என்பதை வலியுறுத்தி சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர்

அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்ததால் சிறிதுநேரம் பரபரப்பு காணப்பட்டது.

வாக்குறுதி எண் 153ல் பத்து ஆண்டுகள் பணிசெய்த தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரவும் செய்வோம் என வாக்குறுதி அளித்து நான்கரை ஆண்டுகள் ஆகியும் அதனை திமுகஅரசு நிறைவேற்ற வில்லை, இந்த அரசை வலியுறுத்தி போராடும் தொழிலாளர்களுக்கு உரிமையை கொடுப்பதற்கு பதிலாக உணவை கொடுக்கிறது என்றும், அதற்கான மூன்று ஆண்டுகளுக்கு ஆகும் தொகை 383 கோடியை தனியாருக்கு கொடுப்பது என்பது தனியார் முதலாளிகளுக்கு ஊக்குவிப்பதாக உள்ளது, அரசின் உத்தரவின்படி

தூய்மைபணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் 761 ரூபாய் வழங்கப்படவில்லை மாறாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என அரசை குற்றம்சாட்டியதுடன், அரசு தங்களது தேர்தல் கால வாக்குறுதி நிறைவேற்றவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments