இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை சார்பில் “சிந்தனை மாற்றம் சமுதாயத்தின் முன்னேற்றம்” என்னும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
10.12.2025 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் திரு. ஜி. இராஜசேகரன் அவர்களின் தொடக்க உரையுடன் ஆரம்பமானது. மேலும் இயக்குநர் டாக்டர் G. பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தொகுப்புரையை பதிவாளர் டாக்டர் M. அனுசுயா வழங்கினார். நிகழ்ச்சியின் கௌரவ சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, ஸ்ரீரங்கம் கிளை, திருச்சிராப்பள்ளி தலைவரும், இந்திரா கணேசன் நிறுவனத்தின் ஆலோசகருமான

Rotarian AKS Dr. K. ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டு, வாழ்த்துரை வழங்கினார். முக்கிய சிறப்பு விருந்தினர் பேராசிரியர் டாக்டர் சத்தியசீலன் A.S., நிறுவனர் மற்றும் தலைமை செயலதிகாரி, PMSC மலேசியா, கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் தமது உரையில் சமுதாய முன்னேற்றத்திற்கு சிந்தனை மாற்றம் அவசியம் என்பதையும், நமக்கு உயிர் கொடுத்த பெற்றோர்கள் மற்றும் கடவுள் ஆகியோருக்கு நித்தமும் நன்றி சொல்லி பழக வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். நந்தனம்

சந்திரசேகரன் அவர்கள் மற்றும் திரு.சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியம் என வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சி சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. இதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக டாக்டர் கே. சித்ரா தேவி (முதல்வர், இணை நல அறிவியல் பள்ளி), டாக்டர் டி. ஸ்ரீராம், டாக்டர் ஆர். பாரத் குமார், மற்றும் டாக்டர் ப. வரலக்ஷ்மி ஆகியோர் பொறுப்பேற்றனர். மொத்தத்தில், இந்நிகழ்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments