கடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது பெங்களூரு அணி

Apr 10, 2021 - 13:10
Apr 10, 2021 - 13:11
 221
கடைசி பந்து வரை விறுவிறுப்பான ஆட்டம்- மும்பையை வீழ்த்தி முதல் வெற்றியை சுவைத்தது பெங்களூரு அணி

ஐபிஎல் 2021 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 159ரன்கள் அடித்தது. 

ஒரே ஓவரில் 3 விக்கெட்கள் எடுததொடு மொத்தமாக 5 விக்கெட்களை வீழ்த்தினார் ஹர்ஷல் பட்டேல். 

160 ரன்கள் என்ற இலக்கொடு களமிறங்கிய பெங்களூரு அணி டி வில்லியர்ஸ் , மாக்ஸ்வல், விராட் கோலி ஆகியோரின் அபாரமான ஆட்டத்தை கண்டது. 

இறுதி ஓவரில் 3 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவை என்ற விறுவிறுப்பான நிலையில் பார்வையார்களை பதட்டத்தில் அமர வைத்தது.

டி விலலியர்ஸ் ரன் அவுட் ஆக, 2 பந்துகள் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில், சூப்பர் ஓவரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், இறுதி பந்தில் ஒரு ரன் அடித்து வெற்றியை சுவைத்தது பெங்களூரு அணி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய

https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr