திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தொழிலாளர்கள் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தொழிற்சங்க நிர்வாகிகளாக உள்ளனர்.
இந்த நிலையில் பெல் நிறுவனத்தில் உள்ள திமுகவின் தொமுச தொழிற்சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி ஒரு பொதுச் செயலாளர், ஒரு பொருளாளர், ஒரு அமைப்புச் செயலாளர், 8 துணை தலைவர், 13 துணை செயலாளர் என மொத்தம் 25 பதவிகளுக்கான தேர்தல் நேற்றையதினம் நடந்தது.
இதில் பெல் தொமுச தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 1826 பேரில் 1725 பேர் வாக்களித்தனர்.
ஒவ்வொரு வாக்காளர்களும் 25 வாக்குகளை செலுத்த வேண்டும்.
இந்த தேர்தலில் முன்னாள் பொதுச் செயலாளர் தீபன் தலைமையில் ஒரு அணியும் பொதுச் செயலாளர் கணேஷ் குமார் தலைமையில் ஒரு அணி மற்றும் பரமேஸ்வரன் தலைமையில் ஒரு அணி என மூன்று அணிகளாக போட்டியிட்டனர்.
அதில் 1725 வாக்குகள் பதிவானது 101 வாக்குகள் பதிவாகவில்லை
இந்த நிலையில் தேர்தல் ஆணையாளராக தொமுச பேரவை இணைப் பொது செயலாளர் விஜயகுமார் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் பதிவான வாக்குகள் நேற்று இரவு 8மணி அளவில் எண்ணத் தொடங்கி இன்று காலை 11:30 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
இதில் தீபன் தலைமையிலான கூட்டணியினர் மொத்தம் உள்ள 25 பதவிகளில் தீபன் 725 வாக்குகள் பெற்று பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் அவருக்கு அடுத்தபடியாக கணேஷ்குமார் 548 வாக்குகளும் பரமேஸ்வரன் 394 வாக்குகளும் பெற்றனர்.
இதில் தீபன் அணியை சேர்ந்த
துணைப் பொதுச், செயலாளராக முத்துக்குமார், பொருளாளராக பூபாலன், அமைப்புச்செயலாளராக கருப்பு, துணைத் தலைவர்களாக உமர் கான், குமார், சதீஷ்குமார், சரவணன்,சுந்தர், பிரகாஷ், ராஜ்,ஜோசப் ஸ்டாலின் ஆகிய 11 பேரும் தேர்வு பெற்றனர்
அதேபோல் துணை செயலாளர்களாக
கார்த்திக், கார்த்திகேயன், பழனிவேல், மணிகண்டன், ராஜேஷ், லட்சுமணன், லோகேஷ் குமார், வசீகரன், விக்னேஷ், விஜயகுமார், வீர சுடலைக்கண், வெங்கடேசன் ஆகிய 12 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
கணேஷ்குமார் அணியை சேர்ந்த ஜேசுராஜ் துணை செயலாளராக வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற அனைவரும் தீபன் தலைமையில் பெல் பயிற்சி மையத்தில் உள்ள அண்ணா சிலை, அம்பேத்கார் , மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததோடு பெல் நிறுவனத்தின் சின்னமான கை சிலையும் முன்பு நின்று கோஷமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தீபன் கூறியதாவது
பெல் நிர்வாக குழு தேர்தல் நடந்தது அதில் தங்கள் அணி வெற்றி பெற்றுள்ளது என்றும் இந்த வெற்றியை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு காணிக்கையாக்குவதாகவும் தேர்தல் ஜனநாயகம் படி நடப்பதற்கும் தொழிலாளர்கள் நம்பிக்கையும் உரிமையும் காக்க வேண்டும் என்பதற்காக திமுக முதன்மைச் செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே என் நேரு தமிழக பள்ளிகளை துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பேரவை தலைவர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும்
மேலும் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையை பெற்றுதொழிலாளர்கள் பிரச்சனையை தீர்க்க முயற்சிப்பேன் என்றார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments