திருச்சி மாவட்டம், லால்குடி காவல் நிலைய சரகம், புறத்தாக்குடி, மாதா கோவில் தெருவை சேர்ந்த வில்லியம் என்பவரது மகன் ஆரோக்கியசாமி 54 கடந்த 18.03.25 அன்று முகநூலில் இருந்த கேப்பிடல் பைனான்ஸ் என்ற விளம்பரத்திலிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டதில், வாட்சப் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதாக கூறி Processing Charge என

ஆரேக்கியசாமியிடம் கூறி ரூ. 1,00,000/- த்தை பெற்று கொண்டு, கடன் தொகை ஏதும் தராமல் ஏமாற்றியுள்ளார் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி பாதிக்கப்பட்ட ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில் கணிணிசார் குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் திருப்பூரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் ஸ்ரீனிவாசன் 43/25, ஜோதிராமன் என்பவரின் மகன் கணபதி 44/, கணபதி என்பவரின் மனைவி கவிதா 33, ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் குற்றவாளிகளான ஸ்ரீனிவாசன் 43 ,கணபதி 44
என்பவர்கள் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு 22.10.2025-ம் தேதி சிறையில் உள்ள குற்றவாளிகளிடம் சார்வு செய்யப்பட்டது .

திருச்சி மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் தற்போதுவரை மொத்தம் 88 தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments