Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தேர்தல் பத்திரத்துடன் தேர்தலை சந்திப்பவர்கள் தோற்பார்கள் திருச்சியில் கி. வீரமணி பேட்டி..

சட்டமேதை அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் தலைவர் கி.வீரமணி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கி.வீரமணி கூறுகையில்… வரும் 19ம் தேதி நடக்க இருக்கிற பொதுத் தேர்தலில் இந்திய அரசு சட்டம் நீடிக்க வேண்டுமா, மீண்டும் மோடி ஆட்சிஏற்பட்டு மனுதர்மம் அரசியல் சாசனம் ஏற்பபடுத்தப்பட வேண்டுமா என சொல்லக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய சவாலை இந்திய நாடு எதிர்கொண்டு உள்ளது. மாநிலங்களவை அழிக்க வேண்டும் என்று நினைத்து எதையெதெல்லாம் போற்றி பாதுகாத்து வந்தார்களோ, அந்த சமூக நீதி, சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் இவைகள் எல்லாவற்றையும் குழிதோண்டி புதைக்கும் வகையில் மோடி ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்ற அளவிலே இந்திய கூட்டணியினர் ஒன்று கூடியிருக்கின்றனர். எனவே மீண்டும் அந்த ஆட்சி வரப்போவதில்லை. இந்தியா கூட்டணி ஆட்சி வந்தால் அம்பேத்கரின் அடித்தட்டான அரசியல் சாசனம் பாதுகாக்கப்படும்.

இந்த ஆண்டு அம்பேத்கருடைய பிறந்தநாள் தனி சிறப்பு உண்டு. அவருடைய அரசியல் சட்டமான அடித்தட்டு ஜனநாயகத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற, சமத்துவம் என்று வேண்டுமென்று சொல்லுகிறவருக்கு நடைபெறுகிற போராட்டம் இது. அம்பேத்கர் ஒளிவிளக்காக இருக்கிறார். இந்திய கூட்டணி வெற்றியை வைத்து மாலை சூட்டுவோம். இன்று பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்கள் என்ற கேள்விக்கு, பாரதிய ஜனதா உடைய தேர்தல் அறிக்கை மக்களுக்கு ஏற்கனவே தெரியும் ஏனென்றால் அது தேறாது. எப்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டாலும் கவலை இல்லை.

அவங்க தேர்தல் அறிக்கையில் மதவெறி, ஜாதி வெறி தான் இருக்கும். தேர்தல் அறிக்கை வெளிச்சமாக தெரிவது தேர்தல் பத்திரம் தான் பல்லாயிரக்கணக்கான ஊழல் பத்திரமான தேர்தல் வேண்டும் என சொல்லுகிறார்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தேர்தலை தேர்தல் பத்திரத்தை வைத்து தேர்தலை சந்திக்கிறார்கள்.தேர்தலை பத்திரம் தோற்கும், பத்திரத்துடன் தேர்தல் சந்திப்பவர்கள் ஜெயிப்பார்கள் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *