தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில்  எழுத்துப்பிழை மற்றும்  சான்றிதழ் கிடைப்பெறாதவர்களுக்கு   வாட்ஸ்ஆப்பில் சான்றிதழ் !!

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில்  எழுத்துப்பிழை மற்றும்  சான்றிதழ் கிடைப்பெறாதவர்களுக்கு   வாட்ஸ்ஆப்பில் சான்றிதழ் !!

திருச்சி மாநகரில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று தீவிரத்தை குறைக்கும் வகையில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 
கலையரங்கம் திருமண மண்டபம், தேவர் ஹால், ஸ்ரீரங்கம் அரியமங்கலம் ,கோ-அபிஷேகபுரம் பொன்மலை கோட்டம் ஆகிய 4 கோட்ட அலுவலகங்கள் என மொத்தம் ஆறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.


 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் அனைவரும்  ஆர்வத்தோடு தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அரசின் சார்பாக  சான்றிதழ் வழங்கப்படும் கடந்த சில நாட்களாக  சிலருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.
சான்றிதழ் பெறாதவர்கள்  இன்றைய தினம் 8220428418,8754753382 என்ற எண்களை தொடர்புகொண்டு விவவரங்களை அளிக்கலாம். 10நிமிடத்தில் 8754940687 எண்ணில் வாட்ஸ்அப் வழியாக சான்றிதழ்கள் வழங்கப்படும்.
அதேசமயம்  சான்றிதழ் பெற்றவர்கள்  சான்றிதழில் ஏதேனும் பெயர் திருத்தம் அல்லது எழுத்துப்பிழைகள் இருப்பின் அதனை மாற்றிக் கொள்ளவும் மேலே குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx