திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில். இறைவன் வந்திருக்கிறார் என்று தெரியாமல் அவருக்கு எதிராக மமதை கொண்டு நடத்திய யாகத்தின் மூலம் ஏவப்பட்ட பூதகணங்களை அடக்கப்பட்டதை கண்டு வந்திருப்பது இறைவன் தான்என்று அறிந்து அவரிடமே தஞ்சமடைந்த முனிவர்களுக்கு தாருகாவனேசுவராக காட்சியளித்ததாக இச்சிவன் கோயிலின் ஸ்தலவரலாறு கூறுகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் முதல்நாள் துலாஸ்நான திருவிழா நடைபெறும். இதனையொட்டி இன்று காலை மூலஸ்தானசிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. அதன் பின்னர் வெள்ளி ரிஷபவாகனத்தில் சோமஸ்கந்தர் அம்பாள், பசும்பொன் மயிலாம்பிகை சாமிகள் புறப்பாடு நடைபெற்றது. மேளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் நடைபெற்ற இந்த ஊர்வலமானது அகண்ட காவிரியை வந்தடைந்தது.
அதன்பின்னர் திருக்கோவிலில் யாகபூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களால் காவிரி ஆற்றில் ஊற்றப்பட்டு பின்னர் ஆற்றில் நின்று புனித நீராடி சென்றனர். தொடர்ந்து அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments