திருச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒரே இடத்தில் ரமலான் சிறப்பு தொழுகை. திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்கள் ரமலான் கொண்டாட்டத்தில் சிறப்பு தொழுகை முடித்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது மகிழ்ச்சியை அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இதேபோல் பாலக்கரை சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியில் ஆயிரம் கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து வந்து ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.ரம்ஜான் பெருவிழாவை முன்னிட்டு திருச்சி மாநகர காவல்துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இஸ்லாமியர்களின் முக்கிய விழாவான ராம்ஜான் பெருவிழா மாநகரில் பள்ளிவாசல்களிலும், திறந்த வெளி மைதானங்களிலும் மற்றும் உள்ளரங்கு உள்ளிட்ட 131 இடங்களில் கூட்டு தொழுகை நடைபெற்றது.
ரமலான் பெருவிழா சிறப்பு தொழுகை ஒட்டி திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பெயரில் துணை ஆணையர் உதவியாளர் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments