தமிழகத்தில் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை இன்று (17.02.2022) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது .இந்நிலையில் வழக்கம் போல, பணம் கொடுத்து, ஓட்டு  வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சி 29வது வார்டில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் கமால் முஸ்தபாவுக்கு ஓட்டளிக்குமாறு, பண பட்டுவாடா செய்கின்றனர்.


திமுக வட்டப்  பிரதிநிதிகளான அலாவுதீன், ஜாபர், முஸ்தபா ஆகியோர், இந்த வார்டுக்கு உட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதிகளில், வாக்காளர்களின் பூத் சிலிப்புகளை வாங்கி, குறித்து வைத்துக் கொண்டு, 500 முதல் 1,000 ரூபாய் வரை பணப்பட்டு வாடாவில் ஈடுபட்டு வருகின்றனர்.தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் பறக்கும் படையினரும் ஆளுங்கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதை வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், பணம் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுக்கின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze
#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn




            
            
            
            
            
            
            
            
            
            


Comments