திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் சோழா அவன்யூ பகுதியில் மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் கேட்பவர்களை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டுவதாகவும் அதனால் பாதுகாப்பு கேட்டு நலச்சங்கத்தினர்

திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் மூன்று பேரை கைது செய்ததோடு மேலும் 10க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.திருச்சி மாநகராட்சியின் 40 வது வார்டுக்கு உட்பட்ட பகுதி திருவெறும்பூர் மலை கோவில் பகுதியில் உள்ள சோழா அவன்யூ பகுதியாகும்.

இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்நிலையில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் மதுஅருந்தி வருவதும், சமுக விரோத செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளதோடு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு.
அடையாளம் தெரியாத கும்பல் மது அருந்திவிட்டு தகாக வார்த்தைகளில் ஒருவரை ஒருவர் சத்தமாக பேசிகொண்டிருந்து உள்ளனர்.இதனை கேட்ட அப்பகுதியை சேர்ந்தவர்களையும் தகாத வார்த்தைகளாலும், ஆபாசமாகவும் திட்டியோதோடு மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக உடனடியாக அப்பகுதி மக்கள் திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு அவர்களில் இரண்டு பேரை பொதுமக்கள் பிடித்து இரவு நேர ரோந்து பணியில் இருந்த திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் இதுஇது சம்பந்தமாக நகர் நல சங்கத்தினர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருவெறும்பூர் போலீசார் சிறுவெறும்பூர் மலை கோவில் வ உ சி நகரை சேர்ந்த விஜய்

மகன் சுதாகர் (18), மலைக்கோவில் ராஜவீதியை சேர்ந்த சந்தோஷ் மகன் யுவராஜ் ( 21), அதே பகுதியை சேர்ந்த பீர்முகமது மகன் சகாப்தின் (19 )ஆகிய மூன்று பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 10 க்கும்மேற்பட்டவரை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



Comments