தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னையில் வாடகைக்கு கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார்.
தென்காசியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த ஜோசப் மீண்டும் காரில் சென்னைக்கு நேற்று மாலை புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது அந்த காரில் தென்காசி, ஆலங்குளத்தை சேர்ந்த விஜய்பாபு அவரது மனைவி யசோதா இவர்களது ஒன்னரை வயது குழந்தை அனோனியா மற்றும்
நண்பர் விஜயபாபு ஆகியோர் உள்பட 5 பேர் பயணித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் என்ற இடத்தில் இன்று நள்ளிரவு கார் வந்தபோது
சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்தின் பின்னால் அசுர வேகத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அப்பளம் போல் நொறுங்கிய காரினுள் சிக்கிய யசோதா, ஒன்னரை வயது குழந்தை அனோனியா மற்றும் விஜயபாபு மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இருப்பினும் கார் ஓட்டுனர் ஜோசப், செல்வகுமார் இருவரும் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த இருவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் இறந்தவர்கள் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து ஓட்டுனர் நெடுஞ்சாலையில் ஒளிரூட்டும் எச்சரிக்கை பலகை ஏதும் வைக்காமல்
அலட்சியமாக இருந்த காரணத்தினால் பேருந்து நின்றதை கவனிக்காத கார் ஓட்டுநர் பேருந்து இன்று நாள் மோதி இந்த கோர விபத்து அரங்கேறியது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAg
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments