திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த வலையபட்டி அருகே சேகர் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பிற்குள் சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று இரை தேடி வந்துள்ளது.
அதனைக் கண்ட சேகர் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பினை சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்பு லாவகமாக பிடித்தனர்.
இதேபோன்று மருங்காபுரி அடுத்த வெட்டுக்காடு பகுதியில் மணி என்பவரது மாட்டுக்கொட்டகை அருகே சுமார் 12 அடி நீளம் உள்ள மலைப் பாம்பு அவர் வளர்த்து வந்த சேவலை விழுங்கிய நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணி உடனடியாக தீயணைப்புத் துறைவிற்கு தகவல் அளித்தார்.இதேபோன்று துவரங்குறிச்சி அடுத்த அய்யனார் கோவில் பட்டி அருகே சாலையின் குறுக்கே சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதியில் சென்ற பொது மக்களை பார்த்ததும் அருகில் இருந்த வயல் பகுதிக்குள் சென்றது .இதனால் பொதுமக்கள் உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலைத் தொடர்ந்து மூன்று மலைப் பாம்புகளையும் பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் மூன்று மலைப்பாம்புகள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments