கடந்த 12.08.22-ம்தேதி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முதலியார் சத்திரம் அருகில் சரித்திர பதிவேடு(ரவுடி) குற்றவாளியை கொலை முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் எதிரிகள் மிட்டாய்பாபு, கவியரசு, சந்தோஷ்குமார் ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணையில் எதிரி மிட்டாய்பாபு மீது ஒரு கொலை வழக்கும், 3 கொலை முயற்சி வழக்குகளும், 6 அடிதடி வழக்குகளும், 3 பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்குகள் உட்பட 18 வழக்குகளும், எதிரி கவியரசு மீது 1 கொலை முயற்சி வழக்கும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்குகள் உட்பட 5 வழக்குகளும், எதிரி சந்தோஷ்குமார் மீது 8 அடிதடி வழக்குகளும், 3 திருட்டு வழக்குகளும், கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கு உட்பட 15 வழக்குகள் (எதிரிகள் 3 நபர்கள் மீதும் மொத்தம் 38 வழக்குகள்) பல்வேறு காவல் நியைங்களில் நிலுவையில் உள்ளது என விசாரணையில் தெரியவருகிறது.
எனவே, எதிரிகள் மிட்டாய்பாபு, கவியரசு, சந்தோஷ்குமார் ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், கொலை முயற்சியில் ஈடுபடுவதும் விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் பாலக்கரை காவல் என ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments