திருச்சி மாவட்டம், துறையூர் போக்குவரத்து காவல்துறையில் தா பேட்டை அருகே வேலம்பட்டியைச் சேர்ந்த பெண் காவலர் அம்பிகா பணியாற்றி வருகிறார், இவர் துறையூர் பாலகரை பகுதியில் பணியில் இருந்துள்ளார், அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்படாதவாறு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் இருவர் மது போதையில் வந்ததாக கூறப்படுகிறது, இவர்கள் சாலையில் திரும்பும்போது இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து உள்ளனர்,
கீழே விழுந்ததை கண்ட பெண் காவலர் அம்பிகா காப்பாற்ற முயன்று இருசக்கர வாகனத்தின் சாவியை பெண் காவலர் எடுத்ததாக கூறப்படுகிறது,
மது போதையில் கீழே கிடந்த ஜெகதீஷன் (18) பெண் காவலர் கையை பிடித்து பலமாக கடித்து காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது, கடித்ததில் காயம் ஏற்பட்ட காவலர் வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டுள்ளார், அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பெண் காவலரை போதை ஆசாமிடம் இருந்து காப்பாற்றி போதை ஆசாமிகளை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்,
பெண் காவலரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போதையில் இருந்த இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முசிறி அருகே வடக்கு நல்லியம்பட்டியைச் சேர்ந்த அஜித் (30) என்பதும், மேல புது மங்களத்தை சேர்ந்த ஜெகதீஷன் (18) என்பதும் தெரிய வந்தது,
இவர்கள் இருவரும் மது போதையில் பெண் காவலரை கையில் கடித்த சம்பவம் துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,
துறையூர் போலீசார் இருவரையும் மீட்டு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு இருவரும் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்ததாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டம், மது போதை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்,
மது போதையில் பெண் காவலரை கடித்த சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision






Comments