Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சிராப்பள்ளி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – 2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (23.02.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 01.01.2026-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு 04.11.2025 முதல் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கெடுப்பு பணிகளின் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்று (23.02.2026) வெளியிடப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி 138-மணப்பாறை தொகுதியில் 2,56,674 வாக்காளர்களும் (ஆண்: 1,26,996, பெண்: 1,29,669, பிற: 9), 139-ஸ்ரீரங்கம் தொகுதியில் 2,71,539 வாக்காளர்களும் (ஆண்: 1,32,024, பெண்: 1,39,470, பிற: 45), 140-திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியில் 2,20,789 வாக்காளர்களும் (ஆண்: 1,06,214, பெண்: 1,14,540, பிற: 35), 141-திருச்சிராப்பள்ளி கிழக்கு

தொகுதியில் 2,03,555 வாக்காளர்களும் (ஆண்: 98,339, பெண்: 1,05,166, பிற: 50), 142-திருவெறும்பூர் தொகுதியில் 2,43,304 வாக்காளர்களும் (ஆண்: 1,18,242, பெண்: 1,25,008, பிற: 54), 143-இலால்குடி தொகுதியில் 2,04,885 வாக்காளர்களும் (ஆண்: 99,319, பெண்: 1,05,540, பிற: 26), 144-மண்ணச்சநல்லூர் தொகுதியில் 2,27,161 வாக்காளர்களும் (ஆண்: 1,09,972, பெண்: 1,17,152, பிற: 37), 145-முசிறி தொகுதியில் 2,06,553 வாக்காளர்களும் (ஆண்: 1,00,924, பெண்: 1,05,614, பிற: 15) மற்றும் 146-துறையூர் (தனி) தொகுதியில் 2,02,720 வாக்காளர்களும் (ஆண்: 98,185, பெண்: 1,04,505, பிற: 30) என மொத்தம் 20,37,180 வாக்காளர்கள் இருந்தனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற சேர்த்தல்/நீக்கல்/திருத்தம் தொடர்பான படிவங்களின் அடிப்படையில் இன்று (23.02.2026) வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 138-மணப்பாறை தொகுதியில் 2,66,019 வாக்காளர்களும், 139-ஸ்ரீரங்கம் தொகுதியில் 2,83,862 வாக்காளர்களும், 140-திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியில் 2,35,903 வாக்காளர்களும், 141-திருச்சிராப்பள்ளி கிழக்கு தொகுதியில் 2,17,397 வாக்காளர்களும், 142-திருவெறும்பூர் தொகுதியில் 2,56,239 வாக்காளர்களும், 143-இலால்குடி தொகுதியில் 2,11,043 வாக்காளர்களும், 144-மண்ணச்சநல்லூர் தொகுதியில் 2,34,217 வாக்காளர்களும், 145-முசிறி

தொகுதியில் 2,12,612 வாக்காளர்களும் மற்றும் 146-துறையூர் (தனி) தொகுதியில் 2,09,011 வாக்காளர்களும் என மொத்தம் 21,26,303 (ஆண்: 10,31,354, பெண்: 10,94,642, பிற: 307) வாக்காளர்கள் உள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி 139-ஸ்ரீரங்கம், குறைந்த வாக்காளர்களை கொண்ட சட்டமன்ற தொகுதி 146-துறையூர் ஆகும். இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் பாலின விகிதம் 1061/1000 (பெண்கள்/ஆண்கள்) மற்றும் மக்கள் தொகையின் அடிப்படையில் வாக்காளர் சதவீதம் 69.38% ஆகும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் மொத்தம் 1,03,489 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்; மேலும் 14,366 இறந்த மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்துள்ள வாக்காளர்களின் பெயர்கள் படிவம்-7 பெற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 19.12.2025 அன்று இருந்த 2785 வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையில் தற்போது எந்த மாறுதலும் இல்லை.
மேற்படி இறுதி வாக்காளர் பட்டியலானது, அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பார்வைக்கு

வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உள்ள பட்டியல் மூலம் தங்கள் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். புதிதாகப் பெயர் சேர்த்தல்/திருத்தம் செய்திட விண்ணப்பித்த 66,568 வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அஞ்சல் துறை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பாக வரும் விண்ணப்பங்களுக்கும் அடையாள அட்டை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். 01.01.2026-ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள், வேட்புமனு தாக்கல் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் கடைசி நாளிலிருந்து பத்து நாட்களுக்கு முன்பு வரை விண்ணப்பிக்கலாம் என உதவி இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திருச்சிராப்பள்ளி தெரிவித்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *