கடந்த 24 மணிநேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக துறையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட தென்பரநாடு பகுதியில் 8 மி.மீ மழையும், மணப்பாறை வட்டாரத்தில் உள்ள பொன்னையாறு அணை பகுதியில் 7.2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், கொப்பம்பட்டியில் 2 மி.மீ, திருச்சி சந்திப்பில் 0.8 மி.மீ, நாவலூர் கோட்டப்பட்டில் 0.5 மி.மீ மற்றும் திருச்சி விமான நிலையப் பகுதியில் 0.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
அதே சமயம் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, திருவெறும்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய வட்டாரங்களில் உள்ள

பெரும்பாலான இடங்களில் மழை ஏதும் பதிவாகாமல் வறண்ட வானிலையே நிலவியது. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தின் அனைத்து மழைமானி நிலையங்களிலும் சேர்த்து மொத்தம் 18.7 மி.மீ மழை பதிவாகியுள்ளது, இதன் சராசரி மழை அளவு 0.78 மி.மீ ஆகும்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments