மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போயிட்டியிடுகிறார். திருவெறும்பூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டள்ள அவர், உரையாற்றும் போது நமது கழக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும். திருவெறும்பூர் தொகுதியில் வசிக்கும் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் இலவச காப்பீடு திட்டம். தமிழகத்தில் உள்ள அனைத்து ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் கழக அரசு அமைந்தவுடன் ஊக்க தொகை வழங்க வலியுறுத்துவேன் என தெரிவித்தார்.

திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளின் செலவு தொகை அனைத்தையும் கழக ஆட்சி அமைந்தவுடன் திருவெறும்பூர் தொகுதி சட்ட மன்ற வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்பதாக வாக்குறுதி அளித்தார் .
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி அமைந்தவுடன், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உண்டான அனைத்து செலவையும் நானே ஏற்று கொள்வேன் எனறும் திராவிட முன்னேற்ற கழக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றும்போது நமது கழக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 1000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்பதை எடுத்துரைத்து திருவெறும்பூர் தொகுதியில் வசிக்கும் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் இலவச காப்பீடு திட்டம் செய்து தருவேன், என்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கும் கழக அரசு அமைந்தவுடன் ஊக்க தொகை வழங்க வலியுறுத்துவேன் எனவும், திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு போட்டிகளின் செலவு தொகை அனைத்தையும் கழக ஆட்சி அமைந்தவுடன் நானே ஏற்பதாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாக்குறுதி அளித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU







Comments