Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் நாளை (31.08.2024) மாபெரும் இலவச மருத்துவ முகாம்…!

ரோட்டரி கிளப் ஆப் திருச்சி டைமண்ட் சிட்டி எலைட் மற்றும் தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல் டிரஸ்டி போர்டு & ஜமாத் கமிட்டி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை (31.08.2024) சனிக்கிழமை தென்னூர் ஹைரோடு பள்ளிவாசல் வளாகத்தில் காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில் பிபி உயர் இரத்த அழுத்தம் பரிசோதனை, சுகர் நீரழிவு பரிசோதனை, ECG இதய பரிசோதனை, EEG நரம்பியல் பரிசோதனை, BMD எலும்பு அடர்த்தி திரையிடல் & பரிசோதனை, கண், பல் பரிசோதனை, மகளிர் மருத்துவம், காய்ச்சல், இருமல், காது, மூக்கு, தொண்டை பரிசோதனைகள் வழங்கப்படுகின்றன.

வரும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு டானிக், களிம்பு, மாத்திரைக்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த பரிசோதனை முகாமில் பெஞ்ச்மார்க் மெடிக்கல் டிரஸ்ட், நியூரோ ஒன், ரெத்னா குளோபல் ஹாஸ்பிடல், வாசன் ஐ கேர், ஹேப்பி டென்டல் கேர் நிறுவனமும் பங்கேற்கிறனர்.

முகாமில் ரூ.4000/-மதிப்புள்ள மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத்தின் தலைவர் முகமது நாசர், செயலாளர் ஜோசப்ராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இந்த அரியவாய்ப்பை பொதுமக்கள் கொள்ளுமாறு ரோட்டரி சங்கம் மற்றும் தென்னூர் பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 87784 03678, 63813 99618 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *