"நாளைய முதல்வரே" - திருச்சியில் பரபரப்பு போஸ்டர்கள்!!

"நாளைய முதல்வரே" - திருச்சியில் பரபரப்பு போஸ்டர்கள்!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நடிகர்களுக்கு ரசிகர்கள் செய்யும் சில சேட்டைகள் பரபரப்பில் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.

ரசிகர்கள் பலர் தங்கள் நடிகர்களுக்காக புதிது புதிதாக யோசித்து கடைசியில் அந்த நடிகர்களே வெறுக்கும் அளவிற்கு செய்து விடுகின்றனர்.

திருச்சி கன்டோன்மென்ட், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் திருச்சி மத்திய மாவட்ட விஜய் ரசிகர்கள் சார்பாக நாளைய முதல்வரே என ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். மேலும் இது குறித்து விஜய் ரசிகர்கள் கூறுகையில் "ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி போல தமிழகத்திற்கு விஜய் வருவார்கள் என்றும், ரஜினி கட்சி துவங்குவதாக சொல்லி உள்ளார். ஆனால் அதற்கு முன்னதாகவே விஜய் அரசியலில் இறங்குவார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்‌.

Advertisement