தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனைக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், டிட்டோஜேக் மாநில அமைப்பின் சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டு வந்தது.

இது குறித்து கடந்த மாதம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் டிட்டோஜேக் அமைப்பினர் நேரடியாக பேசி விளக்கம் அளித்தனர். இருப்பினும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை குறிப்பிட்டு டிட்டோஜேக் அமைப்பினர் பேசினர்.

அரசாணை 243 ஐ ரத்து செய்வது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரி வரும் ஜூலை 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்கள் சென்னையிலுள்ள TPI வளாகத்தை தொடர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments