பசுமை சிகரம், கிரியா, அக்னி அறக்கட்டளை தர்ம இயக்க கூட்டமைப்பு, கடந்த 10 வருடங்களாக சுற்றுச்சூழல் மற்றும் வேளாண் முன்னேற்றத்திற்கு பல்வேறு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். தற்சமயம் காய்கறி விவசாயிகள் மற்றும்

மாடி தோட்டம் அமைக்க விரும்பும் பொதுமக்கள் பயன் பெரும் வகையில் பாரம்பரிய விதை திருவிழா நிகழ்ச்சியை திட்டமிட்டுள்ளார்கள் . நிகழ்ச்சியானது வருகின்ற (27.07.2024) (சனிக்கிழமை) திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் ‘தமிழ்நாடு ஹோட்டல் காவேரி அரங்கில் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவில், பத்ம ஸ்ரீ எஸ்.தாமோதரன் நிறுவனர், கிராமாலயா, திருச்சி விழா தலைமை ஏற்று கண்காட்சியினை துவங்கி வைத்திடவும், மரு.ஆர்.சுகுமார் மேலாண் இயக்குனர். ஸ்ரீ ஜெயரெங்கா இயற்கை மருத்துவமனை மற்றும் யோகா ஆராய்ச்சி மையம், திருச்சி பாரம்பரிய விதை விற்பனையை துவங்கி வைத்திடவும், பிரிட்டோ ராஜ் வேளாண் பொறியியலாளர் விவசாயிகளோடு கலந்துரையாடவும் உ ள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments