Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

பாரம்பரிய முறையில் விஜயதசமி அட்மிஷன் – அரசு பள்ளியை நோக்கி களமிறங்கும் பெற்றோர்கள்!

விஜயதசமி என்றாலே வெற்றி தரும் நாள். நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இறுதியில் ஆயுத பூஜை கொண்டாடப்படும், அப்போது ஆயுதங்கள், புத்தகங்கள் அனைத்தையும் வழிபட்டு வைத்துவிட்டு பத்தாம் நாளான விஜயதசமி இன்று துவங்கினால் வெற்றி தரும் நாளாக அமையும் என்பது ஐதீகம்.

Advertisement

இன்றுதான் குழந்தைகளுக்கு வித்யா உபதேசம் எனப்படும் கல்வி கற்கத் தொடங்கும் அற்புத நாளாக இன்று கொண்டாடுவார்கள். சிறு குழந்தைகளுக்கு விஜயதசமி நாளன்று ஆரம்ப கல்வியை தொடங்கினால் அவர்கள் கல்வியில் மென்மேலும் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. மேலும் ஆயுத பூஜை அன்று அடுக்கி வைத்த புத்தகங்களை சரஸ்வதிபூஜை ஆன இன்று எடுத்து சில வரிகள் படித்தாலே புதிய ஆரம்பமாக இருக்கும் என முன்னோர்கள் கூறுவார்கள்.

அந்தவகையில் விஜயதசமியான இன்று தமிழக அரசு சார்பில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளை சேர்க்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி திருச்சி பிராட்டியூர் அரசு நடுநிலைப்பள்ளியில் விஜயதசமியான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்காக கூடினர். 

Advertisement

எப்போதும் கடந்த வருடங்களில் காட்டிலும் இந்த வருடம் அரசுப் பள்ளிகளிலேயே பெற்றோர்கள் அதிகம் நாட்டம் காட்டி வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் வேலையிழந்து வருமானமின்றி இருந்து வரும் சூழ்நிலையில் தனியார் பள்ளிகளை அதிக கட்டணம் கொடுத்து படிக்க வைக்கும் சூழ்நிலை இருப்பதால் அதிகமான பேர் அரசு பள்ளியை நாடி வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி பிராட்டியார் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் LKG முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கை பிடித்து தாய்மொழியான தமிழின் முதல் எழுத்து “அ” எழுத வைத்து கல்விகற்க துவக்கி வைத்தனர்.

பின்னர் அனைவருக்கும் பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் பள்ளி சார்பில் வழங்கப்பட்டது.

இதில் 10 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர். புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பாரம்பரிய முறைப் படி திலகமிட்டு நெல் மணிகளை பரப்பி அ என்ற எழுத்துக்களை விரலைப் பிடித்து எழுதி கல்வி தொடங்கி வைக்கப்பட்டது. வட்டாரக் கல்வி அலுவலர் கா. மருதநாயகம் சேர்க்கையை தொடங்கி வைத்தார். பள்ளிக் தலைமை ஆசிரியர் ஆஷாதேவி விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *