திருச்சிராப்பள்ளி மாவட்டம். வண்ணாங்கோவிலில் வரும் (24.03.2024) தேதியன்று நாடாளுமன்ற தொகுதிகளின் அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
(24.03.2024)-ஆம் தேதி மதியம் 12:00 மணியிலிருந்து அத்தியாவசிய பொருட்கள், அவசர தேவை வாகனங்கள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற அனைத்து வாகனங்களையும், கீழ்க்கண்ட வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட வேண்டும்.
போக்குவரத்து வழித்தட மாற்றம்
சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் திருச்சி மாநகரம் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, மணப்பாறை வழியாக செல்ல வேண்டும். திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் மணப்பாறை, தோகைமலை, குளித்தலை, முசிறி, துறையூர் வழியாக செல்ல வேண்டும்.
திருச்சியிலிருந்து மணப்பாறை செல்லும் வாகனங்கள் மன்னார்புரத்திலிருந்து பஞ்சப்பூர், மணிகண்டம், விராலிமலை, நொச்சிமேடு ஜங்சன் வழியாக செல்ல வேண்டும். மணப்பாறையிலிருந்து திருச்சி செல்லும் வாகனங்கள் நொச்சிமேடு ஜங்சன், விராலிமலை, மணிகண்டம், பஞ்சப்பூர் வழியாக செல்ல வேண்டும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments