வானில் உயிரிழந்த விமான பயணி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்து இறங்கியது. அந்த விமானத்தில் பயணித்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த தெற்கு குடி பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் சசிகுமார் (வயது 43) என்பவர் பயணம் செய்தார்.

அவருக்கு திடீரென விமான பயணத்தின் போது நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சசிகுமார் விமானத்திலேயே உயிரிழந்துள்ளார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் வந்த பின்னர் அவரின் உடல் மீட்கப்பட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…



Comments