ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்க்கு இன்று அதிகாலை 2:30 மணி அளவில் முதலாவது நடைமேடைக்கு வந்தது. அங்கிருந்து சென்னை புறப்பட்ட பொழுது சிறிது தூரம் சென்ற நிலையில் ரயில் பின்புறத்தில் இருந்த மூன்றாவது பெட்டி கழன்றுள்ளது.

ரயில் சிறிது நேரம் மற்ற பெட்டியுடன் சென்று கொண்டிருந்தது. தகவல் அறிந்து கார்டு கொடுத்த தகவலையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இச்சம்பவம் நிகழ்ந்ததால் உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைந்து வந்தனர்.

உடனடியாக ரயில்வே அதிகாரிகள் மீண்டும் பெட்டியை இணைத்து 30 நிமிடம் தாமதமாக சேது எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டு சென்றுள்ளது. இது தொடர்பாக திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் ரயில்வே திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய பிளாட்பாரம் இருந்து சிறிது தூரத்தில் நிகழ்ந்துள்ளது.
பயணிகள் ஏராளமான ரயில் பெட்டியில் இருந்து இறங்கி பெட்டியை இணைக்கும் வரை அதிர்ச்சி அடைந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments