திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் வாக்கு பதிவிற்கு
 3676 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.  திருச்சிராப்பள்ளி கேம்பியன் மேல்நிலைப்பள்ளி ,புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி, தேவர்ஹால், ஹோலி கிராஸ் கல்லூரி ஆகிய இடங்களில் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தல் 2022 வாக்கு பதிவிற்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள 3676  வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மண்டல அலுவலர்கள் மூலம் பயிற்சி வகுப்பு அளிக்கப்பட்டது .
இந்த பயிற்சி வகுப்பை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் திரு. ப.மு.நெ.முஜிபுர் ரகுமான் அவர்கள் நேரில் பார்வையிட்டு தெரிவித்ததாவது, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்கு 859 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளில் 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். வாக்குப்பதிவு பணியை நேர்மையாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பதற்காக வாக்கு பதிவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3676 வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இன்று சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டது.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும் வாக்குப்பதிவு நடைபெறும் விவரங்களை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை மண்டல குழு அலுவலரிடம் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           130
130                           
 
 
 
 
 
 
 
 

 03 February, 2022
 03 February, 2022





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments