திருச்சி மாவட்டம் லால்குடி அருகேஎசனைக்கோரை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தலைமையில் மண்புழு உர உற்பத்தி செய்தல் குறித்து அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது. இதில் லால்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார் பேசுகையில்…… விவசாயிகள் அனைவரும் உயிர் உரங்கள் அங்கக வேளாண்மை இடுபொருள்கள் பயன்படுத்துதல் முக்கியத்துவம்,

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர விதை தக்கைபூண்டு 50 சத மானிய விலையில் வழங்கப்படுவது குறுவை தொகுப்பு திட்டத்தில் ஜிப்சம், ஜிங்க் சல்பேட், நெல் நுண்ச்சத்து போன்றவற்றை மானிய உரங்கள் பெற்றுக்கொள்ள விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.

குமூளூர் வேளாண்மை கல்வி நிலையத்தில் இருந்து டாக்டர் வி ராதாகிருஷ்ணன் பேசுகையில் உயிர் உரங்கள் பயன்பாடு மண் வளம் காக்கும் அங்கக இடுபொருட்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு ஒட்டுண்ணி அட்டைகள் பயன்படுத்துதல் இன கவர்ச்சி பொறி பயன்படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கிக் கூறினார்.

அதன்பின் உதவி கல்வியாளர் டாக்டர் எஸ் விஜய் மண்புழு உரம் தயாரித்தல் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி தெளிவாக விவசாயிகளுக்கு விளக்கிக் கூறி மண்புழு வகைகள் மண்புழுவின் தன்மை பயிர்களுக்கு மண்புழு உரம் பயன்படுத்தும் அளவு போன்றவற்றை பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார்.

தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் சசிகுமார் தோட்டக்கலை துறை மூலம் வழங்கும் மானிய திட்டங்கள் மாடி தோட்டம் அமைத்தல் பற்றி விவசாயிகளுக்கு விரிவாக விளக்கி கூறினார். இந்த பயிற்சிக்கான ஏற்பாட்டினை வேளாண்மை உதவி அலுவலர் ராஜசேகரன் மற்றும் அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் சபரிச்செல்வன், உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செய்து இருந்தனர். இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments