திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா நிறுவனம் சார்பில் கிராம அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி (14.06.2024) நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வேர்ல்டு விஷன் மேலாளர் செல்வின் முன்னிலை வகித்தார்.

மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு கிராம அளவில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்களின் பங்கு மற்றும் கிராம அளவில் குழந்தைகள் மீதான வன்முறை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம்

இளஞ்சிறார் நீதி சட்டம் குழந்தைகளுக்காக செயல்படும் அரசு அமைப்புகளான மாவட்ட குழந்தைகள் நலக்குழு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு குழந்தைகள் உதவி மையம் இளஞ்சிறார் நீதி குழுமம் மற்றும் வட்டார அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு மாவட்ட அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு ஆகியவற்றின் பணிகள் செயல்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கினார்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர் கீதா மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு மூலமாக செயல்படுத்தப்படும் தற்காலிக வளர்ப்பு பராமரிப்பு திட்டம் பிற்காப்பு வளர்ப்பு திட்டம் குழந்தை தத்து எடுத்தல் மற்றும் நிதி ஆதரவு திட்டம் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் ஒவ்வொரு கிராம ஊராட்சிகளில் இருந்து குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்களான கிராம நிர்வாக அலுவலர்

அங்கன்வாடி பணியாளர் கிராம சுகாதார செவிலியர் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளாட்சி பிரதிநிதிகள் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் குழந்தைகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பணியாளர் டென்னீஸ்ராஜ் வரவேற்றார். ஜேம்ஸ் மணி நன்றி கூறினார். குழந்தை தொழிலாளர் முறை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments