திருச்சி விஷனும், மக்கள் ஊடக மையமும் இணைந்து நடத்தும் மாணவ பத்திரிகையாளர் பயிற்சி கூட்டம் இன்று தொடங்கியது. பயிற்சிக்குத் தகுதிபெற்ற அனைவரும் தேசியக்கல்லூரியில் நடைபெற்ற அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பயிற்சியின் நோக்கம் பற்றியும், பயிற்றுவிக்கும் முறை குறித்தும் விளக்கிக் கூறப்பட்டது. இந்தப் பயிற்சியில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மிகச் சிறந்த ஊடகவியலாளர்களை (NextGen) உருவாக்குவதே இப்பயிற்சியின் நோக்கம். சமூக செயற்பாட்டாளர்களும், சமூக அக்கறை கொண்ட ஊடகவியலாளர்களும் இதன் பின்னணியில் உள்ளனர்.
சமூக மாற்றத்தில் நம்பிக்கை கொண்ட, மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறை ஊடகவியலாளர்களை உருவாக்குவது இப்பயிற்சியின் கூட்டத்தின் நோக்கம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments