சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த புகாரில், அதற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் உள்ளிட்ட 15 பேர் மீது திருச்சி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.சிறுமியின் தாயார் மற்றும் சிறுமியின் உறவுவழி தாத்தா ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், உறவுவழி தாத்தா சிறையில் அடைப்பு. உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதி.

திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்
கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி, 10 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு, சிறுமியும், குடும்பத்தினரும் தலைமறை வாகிவிட்டனர்.
பின்னர், திருச்சி குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் தீர்க்கப்படாத வழக்குகள் குறித்து ஆய்வு செய்தனர். அதில், பெற்றக்குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு தலைமறைவான சிறுமியின் வழக்கு நிலுவையில் இருந்தது.

சம்மந்தப்பட்டவர்களை கண்டறிந்து, சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினரை, கடந்த டிச. 23-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழுவினர் அழைப்புவிடுத்தனர்.
கடந்த ஜன3-ம் தேதி அந்த சிறுமி, தனது தாயார் மற்றும் தாத்தாவுடன் விசாரணைக்கு ஆஜரானார்.

சிறுமியிடம் நடத்திய ரகசிய விசாரணையில், தனக்கு யாரெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்தனர் என்பதை சிறுமி விளக்கியுள்ளார்.
இது குறித்த புகாரினை திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல்காந்தி தயாரித்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்பேரில், சிறுமியின் தாய், உறவுவழி தாத்தா, தாத்தாவின் தம்பி உட்பட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில், திமுக பிரமுகர் உள்ளிட்ட எஞ்சிய 13 நபர்களை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments