திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஜம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் 32/20, த.பெ.ராமர் என்பவர் கடந்த 11.10.2020 அன்று சிறுமியின் வீட்டிற்கு பின்புறம் உள்ள முட்புதருக்குள் தூக்கிசென்று, கட்டாயப்படுத்தி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் ஜம்புநாதபுரம் காவல் நிலைய குற்ற எண். 540/20, U/s 366, IPC 5(1) r/w 6 of pocso Act 9 of child marriage Act 2006 τις 1210.2020 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, 13.10.2020 அன்று எதிரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (03.03.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.சண்முகபிரியா, அவர்கள் எதிரி – பெருமாள் 32/20, த.பெ. ராமர், துளையாநத்தம், ஜம்புநாதபுரம், திருச்சி மாவட்டம் என்பவருக்கு 10 ஆண்டுகால சிறை தண்டனையும், ரூபாய்,6,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த ஜம்புநாதபுரம் காவல் நிலைய நீதிமன்ற காவலர் திருமதி.சாந்தி என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ. செல்வநாகரத்தினம், இகாய அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி
பாராட்டியுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments