இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி,
வாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு முன்நிரப்பப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களிடமிருந்து படிவங்கள் மீள பெறப்பட்டு வாக்குசாவடி அலுவலர்களால் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 145 -முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொட்டியம் வட்டத்தில் 100% சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியினை முடித்த
கிராம நிர்வாக அலுவலர்கள் திரு.தங்கராசு, திருமதி கோமதி, அங்கன்வாடி பணியாளர்கள் திருமதி சுமதி, திருமதி ஜோதி மற்றும் திருமதி வாசுகி ஆகிய
5 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள்* உத்தரவின் படி
முசிறி சார் ஆட்சியர் செல்வி சுஷ்ரீ சுவாங்கி குந்தியா.இ.ஆ.ப., அவர்கள் அவர்களது பணியினை பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார் .

இதேபோல்,
146-துறையூர்(தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வண்ணாடு கிராம உதவியாளர் திரு.நட ராஜ் அவர்கள் 100% சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியினை சிறப்பாக செய்து முடித்ததற்காக துறையூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் திரு.மணிமாறன் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்தார் .

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments