திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல நாகமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(58), த.பெ. வைத்திலிங்கம் என்பவர் கடந்த 08.08.25 அன்று சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டி விட்டு சென்னை சென்றிருந்த போது சிவகங்கை மாவட்டம். கோவனூர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் (எ) அழகு ராஜா (24), த.பெ

ஜெயக்குமார் என்பவர் தன்னுடைய கூட்டாளிகளோடு 08.08.2025 ஆம் தேதி மேற்படி பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் மதிப்பிலான தங்க நகைகளை திருடி சென்றுவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டம் காவல்நிலைய குற்ற எண். 424/25, U/s 331(4), 305(a) BNS படி 17.08.2025 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் எதிரி 09:12.2025 அன்று கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேற்படி சிறையில் இருந்து வரும் எதிரி அலெக்ஸ் (எ) அழகு ராஜா (24), த.பெ. ஜெயக்குமார், கோவனூர், சிவகங்கை மாவட்டம் என்பவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் அடைக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இகாப, அவர்களின் பரிந்துரையின் பேரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு நேற்று 08.0126ம் தேதி திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளிடம் சார்வு செய்யப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், திருச்சி மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டில் 119 தடுப்பு காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 2026 இரண்டாவது தடுப்பு காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட எதிரியிடம் சார்வு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments