திருச்சி ஏர்போர்ட் காவேரி நகர் பகுதியிலுள்ள காலி மனையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இது குறித்து ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஜெயக்குமார் அந்த சாக்கு பையை பிரித்து பார்த்த போது அதில் குறைபிரசவத்தில் பிறந்த ஏழு மாத பெண்
குழந்தை இருந்ததை அறிந்து உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். பின்பு முதலுதவி கொடுக்கப்பட்ட பிறகு அங்கிருந்து அரசு மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH





Comments