திருச்சி SDPI கட்சி 29வது வார்டு கிளை நிர்வாகிகள் கடந்த வாரம் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
SDPI கட்சியின் கோரிக்கையை ஏற்று திருச்சி 29 வார்டுக்கு வருகை தந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய துரை வைகோ அவர்கள் சின்ன சாமி நகர் பகுதியில் ஆபத்தாக உள்ள கேஸ் குடோன் அகற்றுவது சம்பந்தமாக கள ஆய்வு செய்த பின் உயர் மின் கோபுரம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டார்.
மேலும், மக்களின் நீண்ட கால பிரச்சனையான O பாலம் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திதருவேன் என உறுதிமொழி அளித்தார்.
இந்நிகழ்வில்SDPI கட்சி மாவட்டத் துணைத் தலைவர் தளபதி அப்பாஸ், மாவட்ட செயலாளர் சதாம் உசேன், வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் பக்ருதீன், மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, தொகுதி செயலாளர் KSA ரியாஸ், கிழக்குத் தொகுதி தலைவர் சபியுல்லா B.com.,
மேற்கு தொகுதி இணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான், தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்சல் கான், தொகுதி செயற்குழு உறுப்பினர் ஜாகிர் உசேன், கிழக்குத் தொகுதி இணைச் செயலாளர் ராயல் அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப நுட்ப அணி மாவட்ட தலைவர் உபைத்தூர் ரஹ்மான், ஆழ்வார் தோப்பு கிளை தலைவர் அப்பாஸ், தென்னூர் கிளை தலைவர் உதுமான் அலி பொருளாளர் சையது, கிளை செயற்குழு உறுப்பினர்கள் ஷாஜகான் &காதர் மைதீன், கிளை செயல்வீரர் பாசித் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஆழ்வார் தோப்பு பகுதியில் நீண்ட நாள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கு பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments