Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியும் தோழர் ஆர். நல்லகண்ணுவும்: மக்கள் போராட்டங்களும் நெகிழ்ச்சியான நினைவுகளும்!

1997ல் விடுதலைப் பொன் விழா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் நடைபெற்று திருச்சி மாவட்டம் முழுமையிலும் உள்ள தியாகிகள் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்
#திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு ஏஐடியுசி பொதுக்குழுவில் 01.07.98 ல் உரையாற்றி உள்ளார் .
#2005 ஆம் ஆண்டு திருச்சியில் பெருவெள்ளம் கருமண்டபம் உறையூர் பகுதிகளை எல்லாம் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்தியது அந்த இடங்களுக்கு எல்லாம் நேரில் வந்து ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்து அரசின் கவனத்திற்குச் சென்றதோடு பொதுமக்களுக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்
#2006 ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்துதிருச்சி தெப்பக்குளம் பகுதியில் நடைபெற்ற மறியல் பேரணியில் கலந்து கொண்டு கைதானார் .

2011 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பற்றி நேரில் ஆய்வு செய்து திருவரங்கம் தேவி தியேட்டர் அருகில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று உரையாற்றினார்
2002 ஆகஸ்ட் 28 ல் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் போற்றுதலுக்குரிய தலைவராக திகழ்ந்தபிராமண குடும்பத்தில் பிறந்து இஸ்லாமியரை திருமணம் செய்த ஜனகம் இஸ்மாயில் திருச்சி உறையூரில் காலமானதை அறிந்து ஆகஸ்ட் 29 ல் உறையூரில் இருந்து துவங்கிய இறுதி ஊர்வலத்தில் நடந்தே சென்று குடமுருட்டி

கோணக்கரை மயானத்தில் தேசிய செயலாளர் து ராஜாவுடன்..குழந்தை இல்லாத ஜனகம் உடலுக்கு தோழர் நல்லகண்ணு சிதை மூட்டினார் .
26 .5 .2007 ல் திருச்சியில் தோழர் ப. மாணிக்கம் இல்லம் பெயரில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *